புதிய ரேஷன்கார்டு விண்ணபிக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிகாரி
பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த ரேஷன் காடு வழங்கல் அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.
புதிய ரேஷன் கார்டு வழங்குவதற்காக வீட்டிற்கு ஆய்வு செய்ய வந்து அதிகாரி பெண்ணிடம் தவறாக நடந்த கொல்ல முயற்சித்த நபரை உறவினர்கள் மடக்கிப் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர் திருவொற்றியூர் அடுத்த புது வண்ணாரப்பேட்டையில் உள்ள வாசர் வரதப்ப மேஸ்திரி தெருவில் உள்ள பிரியா என்ற பெண் தன் கணவரை இறந்த நிலையில் தனியாக வாடகை வீட்டில் வசித்து வரும் வருகிறார் தற்பொழுது புதிய ரேஷன் கார்டு ஒன்றை ஆன்லைன் மூலமாக பதிவு செய்துள்ளார்.
புதுவண்ணாரப்பேட்டை சுனாமி குடியிருப்பு பகுதியில் உள்ள தண்டையார்பேட்டை மண்டல உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலகத்தில் உள்ள இளநிலை உதவியாளர் அயாத் பாட்சா என்பவர் பிரியாவின் வீட்டிற்கு சோதனைக்காக வந்துள்ளார். அப்பொழுது ஆவணங்கள் சரியாக இல்லை என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். பின்னர் அவர் நேற்று இரவு மீண்டும் அப்பெண்ணிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். அதிகாரியின் நடத்தை சரியில்லை என்பதை உணர்ந்த பிரியா தொலைபேசியை தவிர்த்துள்ளார்.
இந்நிலையில் மீண்டும் அப் பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளார் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் உட்புறமாக வந்து அமர்ந்து கொண்டு தேவை இல்லாத வார்த்தைகளைப் பேசி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்பெண் உடனடியாக சுதாரித்துக்கொண்டு கூச்சலிடவே அக்கம் பக்கத்தில் உள்ள உறவினர்கள் உடனடியாக வந்து ரேஷன் கடை அரசு அதிகாரியை உடனடியாக பிடித்து புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கணவனை இழந்த பெண்களுக்கு நேரிடும் இதுபோன்ற வன்கொடுமைகள் மீண்டும் யாருக்கும் வரக்கூடாது என்று கூறி தற்பொழுது காவல் நிலையத்தில் புகார் அளித்து இருப்பதாகவும் அதிகாரி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.