விதிமீறல் கட்டடங்கள் வரன்முறை: அவகாசம் நீட்டித்து அரசு உத்தரவு

விதிமீறல் கட்டடங்களுக்கான வரன்முறை அவகாசம், மேலும் ஒரு ஆண்டிற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-09-25 05:36 GMT

விதிமீறல் கட்டடங்களுக்கான வரன்முறை அவகாசம், மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில், 2007 ஜூலைக்கு முன்பு கட்டப்பட்ட விதிமீறல் கட்டடங்களை வரன்முறை செய்யும் திட்டம்,  2017ல் அறிவிக்கப்பட்டது. இதில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் செப்டம்பர் 21ல் முடிந்தது.

இந்த நிலையில், இத்திட்டத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அரசாணையை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை பிறப்பித்துள்ளது. அதன்படி, 2022 செப்டம்பர்  21 வரை, இத்திட்டத்தில் பொது மக்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News