திருவொற்றியூரில் கடற்கரையை அழகுபடுத்தும் பணி தீவிரம்

திருவொற்றியூரில் தற்பொழுது முதற்கட்டமாக 653 மீட்டர் துரத்திற்க்கு கடற்கரையை அழகுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

Update: 2022-05-05 06:00 GMT

கடற்கரை பகுதியில் குப்பைகளை கொட்டாமல் இருக்க வேலி அமைக்கப்பட்டுள்ளது.

சிங்காரச் சென்னை 2.0 நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சென்னை திருவொற்றியூர் மண்டலம் ஒன்றில் 14வது வார்டிற்கு உட்பட்ட  எண்ணூர் விரைவு சாலையில் அமைந்திருக்கும் கடற்கரை ஓரம் உள்ள பகுதிகளில் தற்பொழுது முதற்கட்டமாக 653 மீட்டர் துரத்திற்க்கு கடற்கரையை அழகு படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இதன் முக்கிய அம்சமாக பல்வேறு பகுதிகளிலிருந்து குப்பைகள் மற்றும் மண் கழிவுகள் மற்றும் பில்டிங்குகளில் உடைக்கப்படும் கழிவுகள் போன்றவற்றை லாரிகளில் கொண்டு வந்து கடற்கரை ஓரம் உள்ள பகுதிகளில் கொடுக்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கடற்கரையை அழகுபடுத்தி பாதுகாக்கும் பணியில் மண்டல அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக முதலில் கடற்கரை ஓரம் உள்ள பகுதிகளில் கற்கள் பதிக்கப்பட்டு சுற்றிலும் வலைகள் அமைத்து கழிவுகளை உட்புறமாக கொட்ட முடியாத அளவிற்கு பாதுகாப்பு வேலிகள் அமைத்து அழகுபடுத்தும் பணியில் திருவொற்றியூர் மண்டல அலுவலர் சங்கரன், செயற்பொறியாளர் ஜக்குபார் உசேன், உதவி செயற்பொறியாளர் ஆனந்தராவ் மற்றும் இளநிலை பொறியாளர் ஹேமகுமார் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News