பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்

திருவொற்றியூர் அடுத்த வண்ணாரப்பேட்டையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்.;

Update: 2022-04-04 04:00 GMT

திருவொற்றியூர் அடுத்த வண்ணாரப்பேட்டையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திருவொற்றியூர் அடுத்த வண்ணாரப்பேட்டையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆட்டோவில் சிலிண்டரை வைத்து மாலை அணிவித்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவொற்றியூர் அடுத்த புது வண்ணாரப்பேட்டையில் சென்னை வடக்கு மாவட்டம் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரவியம் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட தொண்டர்கள் ஆட்டோவின் மேல் சிலிண்டரை வைத்து அதில் மோடி புகைப்படம் மற்றும் சிலிண்டருக்கு மாலை அணிவித்து மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாகச் சென்றனர்.

புதுவண்ணாரப்பேட்டை போக்குவரத்து வட்டார அலுவலகம் முன்பு ஆரம்பித்து A.E கோயில் தெரு வழியாக பேரணியாக வந்தனர் மேலும் பெட்ரோல் கேஸ் டீசல் விலை நாளுக்கு நாள் ஏறி வருவதால் மக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலையும் ஏறி வருவதாகவும் இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்படைந்து உள்ளதாகவும் அதேபோன்று மன்மோகன் சிங் ஆட்சியில் இருந்த கட்சா விலை குறைவாக இருக்கும் பொழுது பெட்ரோலின் விலையை 50 முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டதாகவும் தற்போது கச்சா விலை குறைவாக இருக்கும் போதிலும் பெட்ரோல் டீசல் விலை அதிக விலைக்கு விற்கப்பட்டு வருவதாகவும் உடனடியாக பெட்ரோல் டீசல் விலைகளை குறைக்க வேண்டும் என்று கூறி கண்டன கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக நடந்து வந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பலராமன் தலைமை வகித்தார் இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News