கிரானைட் கொள்ளைக்கு உடனடியாக முடிவு கட்ட வேண்டும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் கிரானைட் கொள்ளைக்கு முடிவு கட்ட வேண்டும் எனவும், கிரானைட் வளங்களை பாதுகாப்பதில் அரசு விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Update: 2021-06-30 13:34 GMT

சென்னை உயர்நீதி மன்றம் (பைல் படம்)

தமிழகத்தில் கிரானைட் கொள்ளைக்கு முடிவு கட்ட வேண்டும் எனவும் கிரானைட் வளங்களை பாதுகாப்பதில் அரசு விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் அனுமதி இல்லாமல் செயல்படும் குவாரிகளுக்கு எதிராக சரவணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றினை தொடர்ந்திருந்தார்.

மனுவில் தருமபுரி பகுதிகளில் கிடைக்கும் கனிமங்கள் சட்டவிரோதமாக எடுக்கப்படுவதை தடுக்க உத்தரவிட வேண்டும் என்று வழக்கு தொடுத்திருந்தார்.

இன்று வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழகத்தில் நடைபெறும் கிரானைட் கொள்ளைக்கு தமிழக அரசு உடனடியாக முடிவு கட்ட வேண்டும்.

மேலும் அரூர் வட்டாட்சியர் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமெனவும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

Tags:    

Similar News