லாட்டரி சீட்டு விற்பனை செய்த பட்டதாரி இளைஞர் கைது

திருவொற்றியூரில் டாஸ்மாக் பாரில் ஓரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்த பட்டதாரி இளைஞரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-05-28 02:30 GMT

கைது செய்யப்பட்ட சுரேந்தர்.

திருவொற்றியூர் அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகே ஜோஸ்வா என்பவருக்கு சொந்தமான டாஸ்மாக் பாரில் மது குடிக்க வருபவர்களிடம் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு வாங்க வற்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவொற்றியூர் சடயங்குப்பம் பாட்டை சேர்ந்த கூலி தொழிலாளி முருகன். இவர் ஜோஸ்வா பாரில் மது குடித்துக் கொண்டிருந்தார் அப்போது பாரில் பணிபுரியும் இளைஞர் முருகனிடம் ஒரு நம்பர் லாட்டரி வாங்குமாறு வற்புறுத்தி உள்ளார்.

இதனை வாங்க மறுத்த முருகன் ஒரு நம்பர் லாட்டரி விற்க தமிழக அரசே தடை செய்யப்பட்டுள்ளது. இதனை நீ எப்படி விற்பனை செய்கிறாய் என கேட்டுள்ளார். இதனால் அந்த இளைஞருக்கும், முருகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தனிப்படை போலீசார் அங்கு ஒரு நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு தகராறு செய்து கொண்டிருந்த இளைஞரை விசாரணை செய்தனர்.

விசாரணையில் சேலம் மாவட்டம் செந்தாரப்பட்டி, தாலுகாவைச் சுரேந்தர். வயது 27 பி.கா.ம் பட்டதாரி சுரேந்தர் என்றும் கேரளா, பூட்டான், லக்கி லாட்டரி மற்றும் ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. அவனிடம் இருந்து 1485 ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீசார் சுரேந்தர் மீது வழக்குபதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News