சென்னை திருவொற்றியூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நான்காம் ஆண்டு நினைவஞ்சலி
திருவொற்றியூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4 -ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டிஅன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது;
சென்னை திருவொற்றியூரில் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் நான்காம் ஆண்டு நினைவு நாளையொட்டி மலரஞ்சலி மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவொற்றியூர் கிழக்கு பகுதி திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேரடியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் படத்திற்கு மாவட்ட செயலாளர் மாதவரம் எஸ். சுதர்சனம் எம். எல். ஏ கிழக்குப் பகுதி திமுக செயலாளரும் மண்டலக்குழு தலைவருமான தி.மு. தனியரசு ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் குறிஞ்சி கணேசன், ஆசைத்தம்பி, எம். வி.குமார், எம். எல். சரவணன், கேபிள் ராஜா, நித்தியாதாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து திருவொற்றியூரில் பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திருவொற்றியூர் கே வி கே குப்பத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் கே பி சங்கர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதனை அடுத்து அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வட்ட செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான கே. பி சொக்கலிங்கம், திமுக நிர்வாகிகள் ராமநாதன், கார்த்திகேயன், முத்தையா, முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ராயபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் ஐட்ரீம் ஆர்.மூர்த்தி மலரஞ்சலி செலுத்தி அன்னதானம் வழங்கினார். வட சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.