எண்ணூரில் நிவாரண உதவி கோரி மீனவர்கள் சாலை மறியல்

நிவாரணம் அளிக்க கோரி எண்ணூரில் ஞாயிற்றுக்கிழமை மீனவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-12-17 16:00 GMT

எண்ணெய்க் கழிவுகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி எண்ணூரில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட மீனவர்கள்

எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் கலந்துள்ள எண்ணெய் கழிவுகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து உரிய நிவாரணம் அளிக்க கோரி எண்ணூரில் ஞாயிற்றுக்கிழமை மீனவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அண்மையில் ஏற்பட்ட புயல் மற்றும் கனமழையால் பக்கிங்காம் கால்வாயில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் பெட்ரோலிய எண்ணெய்க் கழிவுகள் கலந்து எண்ணூரில் முகத்துவாரப் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எண்ணெய்க் கழிவுகளை அகற்ற சிபிசிஎல் நிர்வாகம் மற்றும் தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் இரு வாரங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது .. இந்நிலையில் இப்பகுதியில் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக கூறி நெட்டுக்குப்பம், தாளங்குப்பம், சின்னகுப்பம், முகத்துவார குப்பம் உள்ளிட்ட சுமார் பத்துக்கும் மேற்பட்ட மீனவர் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் எண்ணூரில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் பேருந்து மற்றும் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது எண்ணெய் கழிவுகளால் சேதமடைந்த பைபர் படகுகள், கட்டு மரங்கள், மீன்பிடிவலைகள் உள்ளிட்டவைகளை சாலையில் நடுவே போட்டு போக்குவரத்தை தடுத்து நிறுத்தினர்.

போராட்டம் குறித்து மீனவர்கள் கூறியது: பக்கிங்காம் கால்வாய் எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் கலந்து உள்ள எண்ணெய் கழிவுகளால் மீன்பிடித் தொழில் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் பலரும் வந்து செல்கின்றனர். ஆனாலும் இதுவரை எவ்வித நிவாரணமும் எங்களுக்கு கிடைக்கவில்லை. மேலும் எண்ணெய் கழிவுகளை அகற்றுவதிலும் தொடர்ந்து தாமதம் நிலவு வருகிறது. பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு உரிய நிவாரணத்தை அரசு வழங்க வேண்டும். இப்பகுதியில் அமைந்துள்ள அரசு நிறுவனங்களில் மீனவர்களின் வாரிசுகளுக்கு உரிய வேலை வாய்ப்பினை அளித்து மறுவாழ்வினை உறுதி செய்ய வேண்டும்.

சாலை மறியல் குறித்து தகவல் அறிந்த அறிந்த ஆவடி காவல் ஆணையரக சட்டப்பேரவை உறுப்பினர் கே .பி. சங்கர், இணை ஆணையர் டாக்டர் விஜயகுமார், எண்ணூர் உதவி பிரமானந்தம், உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் அதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் சமாதானம் அடையாத பொதுமக்கள் மீன்வளத்துறை அமைச்சர் நேரில் வந்து உறுதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்

இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே போராட் டத்தில் ஈடுபட்ட மீனவர்களி டம் பேச்சு வார்த்தை நடத்தி னார். அப்போது சேத மடைந்த படகுகள், வலைக ள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதா ரத்துக்கு நிவாரண உதவி வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். இதனால் சுமார் 3 மணி இந்த நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டம் நீடித்தது. இதனைத் தொடர்ந்து அங்கு வந்த சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே போராட் டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி னார். அப்போது சேத மடைந்த படகுகள், வலைகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதா ரத்துக்கு நிவாரண உதவி வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்

இதனை ஏற்று மீனவர்கள் தங்களது மறியல் போராட் டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மீனவர்களின் இந்த மறியல் போராட் டத்தால் எண்ணூர் பகுதியில் சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்தது.

Tags:    

Similar News