திருவொற்றியூரில் பணம் மோசடி: நிதி நிறுவன மேலாளர், உதவியாளர் கைது
திருவொற்றியூரில் பணம் மோசடியில், நிதி நிறுவன மேலாளர் மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்டனர்.;
பணம் மோசடியில் கைதான வங்கி மேலாளர் மற்றும் உதவியாளர்.
சென்னை திருவொற்றியூர் சன்னதி தெருவில் உள்ள தனியார் நிதி நிறுவனமான சமஸ்தா பைனான்ஸ் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதில் கிளை மேலாளராக பணிபுரிந்து வரும் சரவணன் வயது 25 .என்பவரும் உதவியாளர் லோகேஸ்வரன் வயது 27. என்பவரும் பணிபுரிந்து வந்துள்ளனர்.
தங்கள் நிறுவனம் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் ஊக்கத்தொகை வழங்கப்படுவதாகக்கூறி, கடன் வாங்கி சரியான முறையில் செலுத்தியவர்கள் மீண்டும் கடன் கேட்பது போல் அவர்களுக்கு அக்கவுண்ட்க்கு பணத்தை அனுப்பி வைத்துவிட்டு, மேற்கண்ட அவர்களது அக்கவுண்டிற்கு பணத்தை தவறுதலாக அனுப்பி வைத்து விட்டதாக கூறி பணத்தை கையாடல் செய்து உள்ளனர்.
இதனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தருமாறு கூடுதல் ஆணையாளர் அவர்களிடம் கொடுத்த புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் விசாரணை செய்து, வழக்குப்பதிவு செய்து சரவணன் லோகேஸ்வரன் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.