மணலி பகுதியில் கள்ள நோட்டு கும்பல் கைது: போலீசார் அதிரடி

Update: 2022-04-14 01:15 GMT

கைது செய்யப்பட்ட கள்ளநோட்டு கும்பல்.

திருவொற்றியூர் அடுத்த மணலிபுதுநகர், ஆஞ்சேயர் கோவில் பின்புறம் உள்ள வீடு ஒன்றில் சந்தேகம்படும் படியாக ஆட்கள் நடமாட்டம் இருப்பதாக, மணலிபுதுநகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இத் தகவலின் பேரில் வீட்டில் அதிரடியாக நுழைந்து போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கலர் பிரிண்டர் எந்திரங்கள் மூலம் கள்ள ரூ.200 ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து வைத்திருப்பது தெரியவந்தது.

ரூ.8 லட்சம் மதிப்பிலான கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட கள்ள நோட்டுகள் மூன்று கலர் பிரிண்டர் எந்திரங்கள் மற்றும் கார் ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.

போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்ற மணலிபுதுநகரைச் சேர்ந்த யுவராஜ்(வயது 37) மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த பிரபாகரன்(33) பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த இம்தியாஸ்( 24) திருவொற்றியூர் தாங்கலைச் சேர்ந்த ஜான் ஜோசப்(31) வியாசர்பாடியைச் சேர்ந்த ரசூல்கான்(38) செங்குன்றத்தைச் சேர்ந்த முபாரக்(46) ஆகிய 6பேரை கைது செய்தனர். கைதானவர்களிடம், போலீசார் தொடர்ந்து விசாரித்து வழக்குபதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News