சென்னையில் குற்றவாளி மகன் கைது: தாய் தீக்குளிக்க முயற்சி
சென்னையில் குற்றவாளி மகனை கைது செய்ததை கண்டித்து தாய் தீக்குளிக்க முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.;
சென்னை திருவொற்றியூரில் உள்ள சின்ன மேட்டு பாளையத்தில் வசித்து வரும் பிரபல ரவுடியான அகில்(27) என்பவரை நகர்புற தேர்தலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் துறையினர் கைது செய்தனர்.
இதையறிந்த அவனது தாயார் அன்சாரி(40) திருவொற்றியூர் காவல்நிலையம் முன்பு வந்து தனது புடவைக்குள் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் எடுத்து தனது உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த காவலர்கள் தடுக்க முற்படவே தகாத வார்த்தைகளில் அவர்களை திட்டி தீர்த்துள்ளதாகவும், தனது மகனை உடனடியாக விடுவிக்கவில்லை என்றால் தீக்குளித்து விடுவதாக மிரட்டி காவலர்களை பணி செய்யவிடாமல் தொடர்ந்து இடையூறு செய்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவலர்களை பணி செய்யவிடாமல் இடையூறு விளைவித்ததர்கும், ஆபாச வார்த்தைகளில் தரக்குறைவாக வசைபாடியதற்கும் காவல்துறையினர் அன்சாரியை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அகில் மீது மீஞ்சூர் காட்டுர் காவல் நிலையத்தில் ஏற்கனவே கொலை வழக்கு உள்ளதென்றும், திருவொற்றியூர் காவல்நிலையத்தில் ஏற்கனவே கொலை முயற்சி போன்ற பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.
கைது செய்யப்பட்ட தாய் மகன் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணைக்குப்பின் நீதிபதி உத்தரவின் பேரில் அப்பெண்மணியை விடுவித்தனர். கைது செய்யப்பட்ட ரவுடி அகில் நீதிபதி உத்தரவின் சிறையில் அடைத்தனர்.