சென்னை வண்ணாரப்பேட்டை வியாபாரிகள் சங்கம் சார்பில் இரத்த தான முகாம்

சென்னை வண்ணாரப்பேட்டை வியாபாரிகள் சங்கம் சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்றது.

Update: 2022-05-03 04:04 GMT

சென்னை வண்ணாரப்பேட்டை வியாபாரிகள் சங்கம் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.

திருவொற்றியூர் அடுத்த வண்ணாரப்பேட்டை அனைத்து வியாபாரிகள் சங்க சார்பில் நடைபெற்ற 26-வது இரத்த தான முகாம், சங்க தலைவர் எர்ணாவூர் நாராயணனின் 66 வது பிறந்த நாள் விழா, 30 வது சங்க ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா வாணி மகாலில் நடைபெறுகிறது.

இந்த முகாமை தமிழக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு  முகாமை துவக்கி வைத்து,ரத்ததானம் செய்த கொடையாளிகளுக்குநினைவுப் பரிசு சான்றிதழ், வழங்கினார்.

சங்கத் தலைவர் எர்ணாவூர் நாராயணன்  அமைச்சருக்கு அய்யப்பன் சுவாமி சிலையை பரிசாக வழங்கினார். இந் நிகழ்ச்சியில் வட சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர், சென்னை மாநகராட்சி நகர்ப்புற குழுத்தலைவர் இளைய அருணா, ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினர் எபினேசர், 4-வது மண்டல குழு தலைவர் கணேசன், அரசு ஸ்டாலின் ரத்த வங்கி இணைப்பேராசிரியர் உமேஷ் ,தி.மு.க. மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் கோவிந்தசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாட்டை, துணைத் தலைவர் செல்லப்பா, பொதுச் செயலாளர் தங்கதுரை,பொருளாளர் பாஸ்கர் ,இணைச் செயலாளர் மூர்த்தி, ரவிச்சந்திரன், கண்ணன் ,ராஜேஷ், தணிக்கையாளர் தங்கமுத்து, நிர்வாகிகள் சிவக்குமார் ,ஜம்பு துரை,சீனிவாசன், ராஜேந்திரன் ஆகியோர், கழக பொருளாளர் கண்ணன் வட சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பாஸ்கர், வட சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் வில்லியம்ஸ், கோயம்புத்தூர் மாவட்ட செயலாளர் ஏ ஆர் கிருஷ்ணகுமார் மகளிர் அணி தேவி, திருவொற்றியூர் பகுதி செயலாளர் முத்துக்குமார் ,மாவட்ட இளைஞரணி செயலாளர் சண்முகம்,மாவட்ட மாணவரணி செயலாளர் அன்பரசன் ,நகர செயலாளர் கார்த்திக், மணலி வியாபாரிகள் சங்கத் தலைவர் சண்முகம், எழில்நகர் வியாபாரி சங்க தலைவர் ராஜேஷ் தமிழ்நாடு வணிகர் பேரமைப்பு வட சென்னை மாவட்டச் செயலாளர் ஆதி குருசாமி, பென்னி பேக்கரி காமராஜ் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ரத்த தானம் வழங்கினார்கள்.அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டு, தலைவர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

Tags:    

Similar News