மணலி அருகே ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் கணவர் வெட்டிக்கொலை

மணலி, திருவொற்றியூர் பகுதியில் நடந்த குற்ற சம்பவங்களில் 2 பேர் கொலை செய்யப்பட்டனர்;

Update: 2023-10-03 07:30 GMT

பைல் படம்

மணலி அருகே ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் கணவர் வெட்டிக்கொலை

சென்னை மணலி அருகே ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் கணவரான சுமன் (47) என்பவர் நேற்று நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

சென்னை மணலி புதுநகர்மணலி அருகே ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் கணவர் வெட்டிக்கொலைஅருகே உள்ள விச்சூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் வைதேகி. இவரது கணவர் சுமன். அதிமுகவை சேர்ந்த இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். திங்கட்கிழமை விச்சூர் மேட்டு தெருவில் சுமன் நடந்து வந்து கொண்டிருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நகர்கள் சுமனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்று விட்டனர்.

பலத்த காயமடைந்த சுமனை அங்கிருந்தவர்கள் மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து போய் விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து மணலி புதுநகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தொழில் போட்டி காரணமாக இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

திருவொற்றியூரில் கடற்கரையில் இளைஞர் வெட்டிக்கொலை

திருவொற்றியூர் பட்டினத்தார் கோவில் தெரு அருகே உள்ள கடற்கரையில் திங்கட்கிழமை அதிகாலையில் இளைஞர் ஒருவர் பலத்த வெட்டு காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்த அப்பகுதி மீனவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனை அடுத்து அங்கு வந்த போலீசார் நடத்திய விசாரணையில் அவரது பெயர் ஜோதீஸ்வரன் என்பதன் மணலி எட்டியப்பன் தெருவை சேர்ந்த அருணாச்சலம் என்பவரின் மகன் என்பதும் இவர் மீது ஏற்கெனவே பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாகவும் தெரியவந்தது. 

இது குறித்து வழக்குப் பதிவு செய்த திருவொற்றியூர் காவல் நிலைய போலீசார் ஜோதிஸ்வரனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் போலீசார் நடத்திய விசாரணையையடுத்து இக்கொலையில் தொடர்புடைய திருவொற்றியூர் பட்டினத்தார் கோயில் குப்பத்தைச் சேர்ந்த சுனில் (24), அபினேஷ்( 22 )ஆகிய இருவரையும் திங்கள்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர் மது அருந்து போது ஏற்பட்ட தகராறில் கொலை சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News