பர்மா நகர் அங்காள ஈஸ்வரி கோவில் தீ மிதி திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்

எண்ணூர், பர்மா நகர் முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி கோவில் தீ மிதி திருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2022-04-26 01:15 GMT

எண்ணூர், பர்மா நகர் முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி கோவில் தீ மிதி திருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருவொற்றியூர் அடுத்த எண்ணூர், பர்மா நகர், ஸ்ரீ பீலிக்கான் முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி கோவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலின், 56ம் ஆண்டு தீ மிதி திருவிழா, கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

தொடர்ந்து, 12 நாட்களும், பர்மா நகரில் உள்ள, 11 தெருக்களிலும், அம்மன் வீதி உலா நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான தீ மிதி திருவிழா, நடைபெற்றது. இதில், 12 நாட்களாக காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள், பாரதியார் நகர் கடற்கரையில் நீராடி, பல வகைகளில் அலகுகள் குத்தியும், குண்டுவேல், இளநீர் அலகு, துாக்க நேர்ச்சை, தீச்சட்டி ஏந்தியும், முதுகில் அலகு குத்தி கார், ஆட்டோவையும் இழுத்தவாறு, கோவிலை நோக்கி அருளாடி வந்தனர்.

பின், கோவிலில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தீக்கண்டத்தில் காப்பு கட்டி விரதமிருந்து 1000 மேற்பட்ட பக்தர்கள் பக்தர்கள் ஒருவருக்கு ஒருவர் பின் தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து அம்மனை வழிபட்டனர் பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் உள்ளிட்டவை ஆலயத்தின் சார்பில் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News