எண்ணூர் பகுதியில் பாஜக பிரமுகர் கார் கண்ணாடி உடைபு: ஒருவர் கைது

எண்ணூரில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாஜாக பிரமுகர கார் கண்ணாடி உடைக்கப்பட்டு சம்பவத்தில் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2023-01-02 11:15 GMT

கண்ணாடி உடைக்கப்பட்ட கார்.

திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த திருமுருகன். இவர் பாஜகவில் வட சென்னை கிழக்கு மாவட்ட துணை தலைவராக பதவி வகித்து வருகிறார் இவரது வீட்டு வாசலில் தனது காரை நிறுத்தி வைத்துள்ளார்.

நேற்று இரவு புத்தாண்டு கொண்டாடத்தின் போது அப்பகுதியில் குடிபோதையில் இருந்த இளைஞர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட போது இதில் ஏற்றப்பட்ட மோததில் கார் கண்ணாடி உடைத்து தப்பி சென்றனர்.

இதுகுறித்து திருமுருகன் எண்ணூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் எண்ணூர் போலீசார் லோகேஷ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News