சென்னை மணலி புதுநகரில் ஆட்டோ ஓட்டுநர் அடித்துக் கொலை - 4 பேர் கைது
சென்னை மணலி புதுநகர் பகுதியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ ஓட்டுநர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.;
சென்னை பழைய நா.பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், வயது 28. ஆட்டோ ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். வேலை முடித்துவிட்டு நண்பர்களுடன் மணலி புதுநகர் பகுதியில், மது அருந்திக் கொண்டிருந்த போது வாய்த்தகராறு ஏற்பட்டு அவரது நண்பர்கள் நான்கு பேர் சேர்ந்து கத்தியால் ரவிச்சந்திரனை தலையில் வெட்டி உள்ளனர்.
அப்போது கத்தி உடைந்ததும் அருகிலிருந்த கல்லை எடுத்து நான்கு பேர் சேர்ந்து ரவிச்சந்திரன் தலையில் போட்டுள்ளனர். இதில், சம்பவ இடத்திலேயே ரவிச்சந்திரன் பலியானார்; தகவல் அறிந்து வந்த மணலிபுதுநகர் காவல்துறையினர் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .
மேலும், ரவிச்சந்திரனை கொலை செய்த அவரது நண்பர்களான மதன்குமார், ஜெயபிரகாஷ், தனுஷ் மற்றும் பரத் ஆகிய 4 பேரை கைது செய்து அவர்கள் மீது கொலை வழக்கு போடப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை மத்திய புழல் சிறையில் அடைத்தனர். மதுபோதையில் நண்பர்களே, கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்துக்கு அனுப்பி சிறையில் அடைத்தனர்.