எர்ணாவூர் அருகே தமிழக ஆளுனரை கண்டித்து அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்
எர்ணாவூர் அருகே தமிழக ஆளுனரை கண்டித்து அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
எர்ணாவூரில் அனைத்து கட்சியினர் சார்பில் தமிழக ஆளுனரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாட்டில் நீட் விலக்கு மசோதா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு ஒப்புதலுக்கு அனுப்பாமல் புறக்கணிப்பதாக கூறியும், ஆளுநர் தமிழ் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும், சட்டமன்றத்தை மதிக்காதே ஆளுநர் தமிழ்நாட்டுக்கு தேவையில்லை என்ற கருத்தை வலியுறுத்தியும் திருவெற்றியூர் அடுத்த எர்ணாவூர் பகுதியில் அனைத்து கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஆர்ப்பாட்டத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிகுழு உறுப்பினர் வெங்கட் ஐயா தலைமையேற்றார். நான்காவது வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜெயராமன் கண்டனவ உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சி.பி.ஐ. எம். மாவட்ட செயற்குழு பாக்கியம்,சி.பி.ஐ.எம். பகுதி செயலாளர்கள் கதிர்வேல்,தி.மு.க. ராம்குமார்,ம.தி.மு.க. அருள், வி.சி.க. புருஷோத்தமன், மாணவர் சங்கம் அகல்யா சி.பி.ஐ. எம். கிளை செயலாளர் ஆருமுகம் ஆகியோர் கலந்துகொண்டு ஆளுநருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்,