பள்ளி, கல்லூரிகளை சிறப்பாக நடத்த 12 கல்வியாளர்கள் கொண்ட ஆலோசனை குழு
பள்ளி, கல்லூரிகளை சிறந்த முறையில் நடத்த கல்வி நிறுவனங்களை நடத்தும் 12 பேர் கொண்ட ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்து சமய அற நிலையத்துறையின் கீழ் பள்ளி, கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றது. அவற்றை மேம்படுத்த அமைச்சர் சேகர்பாபு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
தற்போது செயல்பட்டு வரும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் புதியதாக தொடங்கப்படவுள்ள பள்ளி, கல்லூரிகளை சிறந்த முறையில் நடத்துவதற்கு கல்வியாளர்களை கொண்ட ஆலோசனை குழு அமைக்க வேண்டும் என கமிஷனர் அரசிடம் கோரிக்கை வைத்தார்.
அதன் அடிப்படையில் அந்த கோரிக்கையினை பரிசீலனை செய்து இந்து அறநிலையத்துறை சார்பாக செயல்படும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் புதியதாக தொடங்கவுள்ள பள்ளி, கல்லூரிகளை சிறந்த முறையில் நடத்துவதற்கு கல்வி நிறுவனங்களை நடத்தும் 12 முக்கிய பிரமுகர்களை கொண்டு ஆலோசனை குழு அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.