சென்னையில் சுனாமியால் உயிரிழந்தவர் களுக்கு 18-ஆம் ஆண்டு நினைவஞ்சலி
சுனாமி நினைவு தினத்தையொட்டி வடசென்னை கடற்கரையில் திமுக அதிமுக சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது;
18-ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி காசிமேடு மீன்பிடித்துறைமுகத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில் நினைவஞ்சலி செலுத்தினர். மேலும் பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி ஆழிப்பேரலை தாக்குதலில் வடசென்னை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் காசிமேடு மீன்பிடித்துறைமுகமே சின்னாபின்னமாகிவிட்டது. இந்நிகழ்வுகளை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் வடசென்னை பகுதியில் நினைவஞ்சலி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆழிப்பேரலை தாக்கியதன் 18-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த நினைவு பதாகைக்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார். இதில் வடசென்னை முன்னாள் மக்களவை உறுப்பினர் வெங்கடேசபாபு
அதிமுக சார்பில் ...
மீன்பிடித்துறைமுகத்தின் மற்றொரு பகுதியில் அதிமுக மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் மீன்பிடித் துறைமுகத்தில் மலர் தூவி கட்சியின் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். அப்போது சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அதிமுக மாவட்ட செயலாளர்கள் நா.பாலகங்கா, டி.ஜி. வெங்கடேஷ்பாபு, விருகை வி.என். ரவி, மாவட்ட பொருளாளர் ஏ.கணேசன் மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் பி.ஜெகன், பகுதி செயலாளர் சீனிவாச பாலாஜி நித்தியானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருவொற்றியூர் கடற்கரை பகுதியான திருவொற்றியூர் குப்பத்தில் அ.தி.மு.க. பகுதி செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.குப்பன் தலைமையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்ற மௌன ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஐநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் ஏந்தியபடி வந்தனர். அப்போது ஐநூறுக்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் மாமன்ற உறுப்பினர் முனைவர் கே கார்த்திக், முன்னாள் கவுன்சிலர்கள் வேலாயுதம், மணிக்குமார், பட்டாபிராமன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திமுக சார்பில் அஞ்சலி:
திமுக சார்பில் வடசென்னை மாவட்ட செயலாளர் தா.இளைய அருணா தலைமையில் மீன்பிடி துறைமுகத்தில் சுனாமியால் உயர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஜே.ஜே எபினேசர் எம்.எல்.ஏ (ஆர்.கே.நகர்) லட்சுமணன், தீனதயாளன், வெற்றி வீரன், கணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
எண்ணூர் சின்னக் குப்பம் பகுதியில் பகுதி செயலாளர் வழக்கறிஞர் ம.அருள்தாஸ் தலைமையில் சுனாமியால் உயிரிழந்தர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கடலில் பால் ஊற்றினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட திமுக செயலாளர் எஸ்.சுதர்சனம் எம்.எல்.ஏ., மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு, முன்னாள் நகர் மன்றத் தலைவர் திருசங்கு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
மீனவ மக்கள் முன்னணி சார்பில் வி.சங்கர் தலைமையில் சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அனைத்து மீனவர் சங்கம் சார்பில் நாஞ்சில் ரவி தலைமையில் அஞ்சலி செலுத்தி பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.