தமிழகத்திற்கு ஜூலை 12ம் தேதிக்குள் 15.85 லட்சம் தடுப்பூசிகள் : மத்திய அரசு உறுதி
தமிழகத்திற்கு ஜூலை 12ம் தேதிக்குள் 15.85 லட்சம் தடுப்பூசி டோஸ் தருவதாக மத்திய அரசு உறுதியளித்ததாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழகத்திற்கு ஜூலை 12ம் தேதிக்குள் 15.85 லட்சம் தடுப்பூசி டோஸ் தருவதாக மத்திய அரசு உறுதியளித்ததாக டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளை சந்தித்த பிறகு தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது, தடுப்பூசி உற்பத்தியில் சவால் தரச்சான்று வழங்குவதன் காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.