திருவொற்றியூர் ரவுடி கொலையில் கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்
தொடர்ந்து தொல்லை கொடுத்தால் ரவுடி சீனிவாசனை கொன்று தண்டவாளத்தில் வீசயதாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
திருவொற்றியூர், கார்கில் நகர், அபிபுல்லா தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி, இவரின் மகன் சீனிவாசன்(22), இவர், மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன, மேலும், அந்த பகுதியில் ரவுடியாக வலம் வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 24ம் தேதி திருவொற்றியூர் ரயில்வே தண்டவாளத்தில், சீனிவாசன் உடல் பாகங்கள் தனி தனியாக சிதைந்து கிடந்தன. இதுகுறித்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் சீனிவாசன் உடல் பாகங்களை மீட்டு, பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், சீனிவாசன் உடல் சிதறி கிடந்த இடத்தில், உடைந்த பாட்டில்கள், ஓடுகள், ரத்தக்கறை ஆங்காங்கே இருந்தது. இதனால் அவரை கொலை செய்து தண்டவாளத்தில் உடலை வீசிவிட்டு சென்றதை கண்டுபிடித்தனர். இதையடுத்து, கொலை வழக்காகப்பதிவு செய்து போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.
இதையடுத்து, ரயில்வே எ.ஸ்.பி அதிவீரபாண்டியன் உத்தரவின்பேரில், டி.எ.ஸ்.பி. முதுக்குமார் தலைமையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், தலைமையில் கொண்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் சீனிவாசன் கொலையில் தொடர்புடைய திருவொற்றியூர், அண்ணாமலை நகர், 7வது தெருவை சேர்ந்த உத்திரபிரதேசத்தை சேர்ந்த ரகிமான்(19), ராஜேஷ்(23), டீக்கடை லேன் பகுதியை சேர்ந்த தீனா(எ) மாமா(18), ராஜீவ்காந்தி நகர் சார்ந்த மணி(23), கிராம தெரு ராஜேஸ்வரி நகரை சேர்ந்த தினேஷ்(எ) மண்டை தினேஷ்(19) ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில், கடந்த 6 மாதத்துக்கு முன்பு மண்டை தினேஷை தலையில் சீனிவாசன் பாட்டிலால் தாக்கி கொல்ல முயன்றார். அந்தவழக்கில், சாத்தாங்காடு போலீசார், சீனிவாசனை கைது செய்தனர். ஜாமீனில் வந்தும், மண்டை தினேசுக்கு தொல்லை கொடுத்து வந்ததாகவும், இதனால் நட்பாக பேசி, சீனிவாசனை மது அருந்த அழைத்து சென்று அவரை பாட்டில் மற்றும் கல்லால் அடித்து கொன்று, உடலை தண்டவாளத்தில் வீசினோம் என்று வாக்குமூலம் அளித்தனர். இதனைத்தொடர்ந்து இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.