ஓட்டேரியில் நிதி நிறுவன ஊழியரை தாக்கி பணம் பறித்த வழக்கில் ரௌடி கைது

தினேஷ் மீது புளியந்தோப்பு ஓட்டேரி தாம்பரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 20க்கும் மேற்பட்டவழக்குகள் நிலுவையில் உள்ளன

Update: 2022-03-13 08:27 GMT

 போலீஸாரால் கைது செய்யப்பட்ட ரௌடி தினேஷ்.

ஓட்டேரியில் நிதி நிறுவன ஊழியரை தாக்கி பணம் பறித்த வழக்கில் பிரபல ரௌடி கைது செய்யப்பட்டார்.

சென்னை ஓட்டேரி சச்சிதானந்தம் தெரு பகுதியை சேர்ந்தவர் பெருமாள்( 21 ). இவர் கொசபேட்டையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் 12 மணியளவில் தன்னுடன் வேலை செய்யும் காளிமுத்து என்பவருடன் இருசக்கர வாகனத்தில் பல்வேறு இடங்களுக்கு  சென்று பணம்வசூலித்து விட்டு  ஓட்டேரி கொசப்பேட்டை அருகே வரும்போது அவரைக் இரண்டு பேர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த 17 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்தை  சென்றனர்.

இதுகுறித்து பெருமாள் ஓட்டேரி காவல் நிலையத்தில் அளித்தபுகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஓட்டேரி போலீஸார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து புளியந்தோப்பு கே. எம். கார்டன பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்கின்ற ஐட்டு தினேஷ்( 32 ) என்ற நபரை கைது செய்தனர். இவர் மீது புளியந்தோப்பு ஓட்டேரி தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 20க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனை அடுத்து தினேஷ் மீது வழக்கு பதிவு செய்த ஓட்டேரி போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவருடன் இருந்த பூச்சி என்ற நபரை தேடி வருகின்றனர்..

Tags:    

Similar News