ஓட்டேரியில் கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை விற்க முயன்றவர் கைது
சென்னை ஓட்டேரியில், கூடுதல் விலைக்கு விற்பதற்காக, மது பாட்டில்களை வாங்கியவர் கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால், நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனால் கள்ளச்சந்தையில் மது பாட்டிலில் விற்க சிலர் முன்கூட்டியே மது பட்டில்களை வாங்கி பதுக்கி வருகின்றனர். போலீசார் அவர்களை கண்டுபிடித்து, வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அவ்வகையில், சென்னை ஓட்டேரி பிரிக்லின் ரோடு பகுதியில், போலீசார் வாகனச்சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான நபர் ஒருவர், அதிக மதுபாட்டில்களை வாங்கி செல்வதை பார்த்து, அவரை அழைத்து விசாரணை செய்தனர். இதில் அந்த நபர் ஓட்டேரி எஸ் எஸ் புரம் பகுதியைச் சேர்ந்த அப்புன் ராஜ் வயது 40 என்பதும், நாளை மதுக்கடைகள் மூடப்பட்டு இருப்பதால் கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்ய, இன்று கூடுதலாக மது பாட்டில்களை வாங்கியது தெரியவந்தது வந்தது. அவரிடம் இருந்து 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.