தேர்தல் விதி மீறல்: சென்னை பேசின்பிரிட்ஜ் பகுதியில் ரூ.85 ஆயிரம் பறிமுதல்
சென்னை, பேசின் பிரிட்ஜ் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் 85 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.;
பேசின் பிரிட்ஜ் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் 85 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் இருந்து வருகின்றன அந்த வகையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் தினமும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்து வருகின்றனர் அந்த வகையில் சென்னை திரு வி க நகர் மண்டலத்துக்கு உட்பட்ட பேசின்பிரிட்ஜ் சாலை ஹஜ் பில்டிங் அருகே நேற்று திருவிக நகர் பறக்கும்படை அதிகாரி ஞானப்பிரகாசம் தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்
அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்றை மடக்கி சோதனை செய்தபோது அந்த காரில் 85 ஆயிரம் ரூபாய் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது இதனையடுத்து அந்த பணத்தை கொண்டு வந்த திருவான்மையூர் ஜெயராம் தெரு பகுதியை சேர்ந்த ரகுநாத் 37 என்ற நபரிடம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர் கட்டுமான தொழில் செய்து வருவதாக கூறி அதற்காக பணத்தை கொண்டு செல்வதாக தெரிவித்தார் அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அந்த பணத்தை திருவிக நகர் மண்டல உதவி தேர்தல் அலுவலரிடம் அந்தப் பணத்தை ஒப்படைத்தனர் அவர் அந்த பணத்தை பெரம்பூர் கருவூலத்தில் ஒப்படைத்தார்.