சென்னை ஓட்டேரியில் ரவுடி ஓட்டிய இருசக்கர வாகனம் மோதி முதியவர் பலி
சென்னை ஓட்டேரியில் ரவுடி ஓட்டிய இருசக்கர வாகன மோதி முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
சென்னை, அயனாவரத்தை சேர்ந்தவர் கிருபாநிதி(20). ரவுடியான இவர் குடிபோதையில், தனது நண்பரான ஓட்டேரியை சேர்ந்த, பிரேம்குமார்(20) என்பவருடன், இருசக்கர வாகனத்தில்,குன்னுார் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, நம்மாழ்வார்பேட்டை குன்னூர் நெடுஞ்சாலை பகுதியில் சாலையில் தாறுமாறாக ஓடிய இருசக்கர வாகனம், சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது மோதியது. பின், எதிர்புறமாக வந்த முதியவர் மீது மோதியது. இதில் முதியவர் தூக்கி வீசப்பட்டார்.
இந்த விபத்தில் காயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த, அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், விபத்தில் இறந்தவர் நம்மாழ்வார்பேட்டையை சேர்ந்த சண்முகம்(61) என்பதும், இவர் பழ வியாபாரி என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து, விபத்தை ஏற்படுத்திய ரவுடி கிருபாநிதியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கிருபாநிதி மீது, அண்ணா நகர் உட்பட சென்னையில் பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..