தலைமை செயலக காவலர் குடியிருப்பு பகுதியில் கஞ்சா விற்பனை: 3 பேர் கைது

தலைமை செயலக காவலர் குடியிருப்பு பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-12-28 04:33 GMT

கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட மூவர்.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்களை போலீசார் தொடர்ந்து கைது செய்து அவர்களை சிறையில் அடைத்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலக காவலர் குடியிருப்பு பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக தலைமைச்செயலக காவலர் குடியிருப்பு காவல்நிலைய போலீசாருக்கு  ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தலைமைச் செயலக காவலர் குடியிருப்பு பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த சத்யா 22 அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த திவாகர் 22 வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த ஆனந்த் வயது 20 என்பது தெரியவந்தது.

இவர்கள் 3 பேரும் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து கஞ்சாவை வாங்கி வந்து அதனை சில்லறை விற்பனையில் வட சென்னையின் பல்வேறு இடங்களில் விற்று வந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து இவர்களிடம் இருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News