348 நபர்களுக்கு மறுகுடியமர்வு செய்ய கருணைத் தொகையை வழங்கினார் அமைச்சர்
348 குடியிருப்புதாரர்களுக்கு கருணைத் தொகையாக ரூ.83.52 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார் அமைச்சர்;
இன்று சென்னை சாந்தோம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குயில் தோட்டம் திட்டப்பகுதியில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மறுகுடியமர்வு செய்ய 348 குடியிருப்புதாரர்களுக்கு கருணைத் தொகையாக ரூ.83.52 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார். உடன், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் ம.கோவிந்த ராவ் ஆமயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, மாமன்ற உறுப்பினர் ரேவதி, வாரியத் தலைமைப் பொறியாளர் ஆர்.எம்.மோகன் , வாரியப் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.