தஞ்சாவூர் தேர் விபத்து- அதிமுக இஃப்தார் நோன்பு நிகழ்ச்சி ஒத்திவைப்பு

தஞ்சாவூர் தேர் விபத்து காரணமாக அதிமுக சார்பில் இன்று நடக்கவிருந்த இஃப்தார் நோன்பு நாளை மாலைக்கு ஒத்திவைப்பு.;

Update: 2022-04-27 08:14 GMT

அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி

தஞ்சாவூர் தேர் விபத்து காரணமாக அதிமுக சார்பில் இன்று நடக்கவிருந்த இஃப்தார் நோன்பு நாளை மாலைக்கு ஒத்திவைப்பு..!!

அதிமுக சார்பில் சென்னையில் இன்று நடைபெறவிருந்த இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், அதிமுக சார்பில் இன்று நடைபெறவிருந்த இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி, களிமேடு கிராம தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒத்திவைக்கப்படுகிறது. அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நாளை மாலை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அரங்கில் நடைபெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News