தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 7,817 பேருக்கு கொரோனா, 182 பேர் பலி
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,817 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்று ஒரேநாளில் மட்டும் 182 பேர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளனர்.;
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
இன்று 1,72,543 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் புதிதாக 7,817 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,22,497 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் நோய்க்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று ஒரேநாளில் மட்டும் 182 பேர் உயிரிழந்னர். இதன் மூலம் கொரோனா நோயால் இதுவரை 31,197 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று ஒரே நாளில் மட்டும் 17,043 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 23,21,928 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலம் முழுவதும் 69,372 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.