திமுக வேட்பாளரின் பாரில் இளைஞர் கொலை: பார் ஊழியர்கள் இருவர் கைது

மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளரின் பாரில் இளைஞர் ஒருவரை அடித்து கொலை செய்யப்பட்டார்; இது தொடர்பாக பார் ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2022-02-12 00:00 GMT

கைதான பார் ஊழியர்கள். 

சென்னை மேற்கு மாம்பலம், ரெட்டி குப்பம் ரோட்டில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது, இந்த கடையில் 11ம் தேதி காலை 9 மணிக்கு,  மது குடிப்பதற்காக கோகுல் (21), என்ற இளைஞர் வந்துள்ளார். அப்போது மது பாட்டில் இல்லை என கூறி பார் ஊழியர்கள் திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.

ஆத்திரமடைந்த கோகுல்,  சாலையில் இருந்த கல்லை எடுத்து வந்து பார் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பதிலுக்கு, பார் ஊழியர்கள் இருவர்,  உருட்டுக் கட்டையால் கோகுலை சரமாறியாக தாக்கி, பாருக்கு வெளியே இழுத்து வந்து வீசியுள்ளனர். இதனை அப்பகுதியில் துப்புரவு வேலை செய்யும் கோகுலின் தந்தை கண்ணன் பார்த்து, கோகுலை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

மதியம் 1.30 மணியளவில் உணவு கொடுக்க எழுப்பிய போது,  உடலில் அசைவு ஏதும் இல்லாததால் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, பரிசோதித்து பார்த்ததில், கோகுல்  இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து குமரன் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு,  அவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கோகுலின் தந்தை கொடுத்த புகாரின் பேரில்,  உருட்டு கட்டையால் தாக்கி கொலை செய்த பார் ஊழியர்கள் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சஞ்சய் (எ) சகாய ஜெபஸ்டின் (24), ராமநாதபுரத்தை சேர்ந்த கோபி (37), ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை செய்ததில் அந்த பார், வேளச்சேரி தொகுதிகுட்பட்ட 176 வது வார்டில் வேட்பாளராக போட்டியிடும் திமுக பிரமுகர் வே.ஆனந்தம் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது.

திமுக வேட்பாளர் ஆனந்தம். 

கைது செய்யப்பட்ட இருவரும் கட்டையால் தாக்கியதை ஒப்புக் கொண்டதன் பேரில்,  302 பிரிவின் கீழ் கொலை வழக்கு பதிவு செய்து,  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். திமுக பிரமுகர் ஆனந்தம் என்பவரின் வேளச்சேரி பாரில், 2012ம் ஆண்டில் ஒரு கொலை நடந்ததும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News