சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் கமிஷனர்கள் திடீர் ஆய்வு

சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப்சிங் ஆகியோர் இணைந்து, தி நகர் ரங்கநாதன் தெரு சாலையில் ஆய்வு செய்தனர்.

Update: 2021-09-20 01:00 GMT

சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப்சிங் ஆகியோர் இணைந்து தி நகர் ரங்கநாதன் தெருவில் ஆய்வு மேற்கொண்டனர்.

செய்தனர்.

கொரோனா தொற்றால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, சென்னை மாநகரில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அத்துடன், முகக்கவசம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, பொதுமக்கள் கூட்டம்  அதிக காணப்படும் இடங்களான தி. நகர் மற்றும் மெரினா காந்தி சிலை மற்றும் சென்ட்ரல் ரயில்வே நிலையம் உள்ளிட்ட பகுதி சாலைகளில் தொற்று நோய்கள் பாராமல் தடுக்கும் விதமான இடங்களில், உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

அவ்வகையில், கொரோனா மூன்றாவது அலை வராமல் தடுக்கும் நோக்கில்,  பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர காவல்துறை அதிகாரிகள் உள்ளடக்கிய 15 மண்டல அமலாக்க குழுவினர் கடந்த 16ம் தேதி முதல் சென்னை பெருநகரின் முக்கிய பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதன்படி, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப்சிங் ஆகியோர் இணைந்து, தி நகர் ரங்கநாதன் தெரு சாலையில் நேற்றிரவு ஆய்வு செய்தனர்.

Tags:    

Similar News