முல்லை பெரியாறு மேற்பார்வை குழுவில் உறுப்பினராக சுப்பிரமணியம் நியமனம்

முல்லை பெரியாறு அணை மேற்பார்வை குழுவில் கூடுதல் உறுப்பினராக ஆர்.சுப்பிரமணியத்தை நியமனம் செய்து அரசாணை வெளியிட்டது;

Update: 2022-04-20 12:42 GMT

முல்லை பெரியாறு அணை மேற்பார்வை குழுவில் கூடுதல் உறுப்பினராக ஆர்.சுப்பிரமணியம் நியமனம்

முல்லை பெரியாறு அணை மேற்பார்வை குழுவில் கூடுதல் உறுப்பினராக ஆர்.சுப்பிரமணியத்தை நியமனம் செய்து அரசாணை வெளியிட்டது. தமிழக அரசு.

முல்லை பெரியாறு அணை மேற்பார்வை குழுவில் கூடுதல் உறுப்பினராக ஆர்.சுப்பிரமணியத்தை நியமனம் செய்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. ஏற்கெனவே, முல்லைப்பெரியாறு அணை மேற்பார்வை குழுவில் 3 பேர் உள்ள நிலையில், கூடுதலாக 3 பேரை சேர்க்கலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி உத்தரவு பிறப்பித்து இருந்தது.


முன்னதாக, முல்லைப்பெரியாறு அணை மேற்பார்வைக் குழுவின் தலைவராக குல்சன் ராஜ் மற்றும் தமிழ்நாடு-கேரள அரசின் நீர்வளத்துறைச் செயலாளர்கள் உள்ளனர். இந்த நிலையில், மத்திய அரசு தரப்பில் இருந்து ஒரு தொழில்நுட்ப வல்லுநரும், தமிழ்நாடு மற்றும் கேரளா தரப்பில் இருந்து தலா 1 தொழில்நுட்ப வல்லுநரும் கூடுதலாக நியமிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில், காவிரி தொழில்நுட்ப குழுத்தலைவர் ஆர்.சுப்பிரமணியம் தமிழ்நாட்டு அரசின் தொழில்நுட்ப வல்லுநராக தமிழ்நாடு அரசு நியமனம் செய்து இன்று (ஏப்.20) அரசாணை வெளியிட்டுள்ளது.





 


 


Similar News