மழை வெள்ளத்தில் ஆவணங்களை இழந்தவர்கள் நகல் சான்றிதழ் பெற சிறப்பு முகாம்

சென்னை மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் ஆவணங்களை இழந்தவர்கள் நகல் சான்றிதழ் பெற சிறப்பு முகாம் நாளை நடைபெறுகிறது;

Update: 2023-12-11 12:18 GMT

வெள்ளத்தில் சேதமான ஆவணங்கள் - கோப்புப்படம் 

சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:

சென்னை மாவட்டத்தில் மிக்ஜம் புயல், மழை மற்றும் வெள்ளம் காரணமாக, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்று, இருப்பிடச் சான்று, வாரிசுச் சான்று, பள்ளி மற்றும் கல்லூரிச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசு ஆவணங்களை இழந்தவர்கள், அவற்றை மீண்டும் பெறும் வகையில், அதற்கென சிறப்பு முகாம்கள் நடத்தி, பொதுமக்களுக்கு கட்டணமின்றி அதனை வழங்கிட முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

இதைத் தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களில் ( 1 முதல் 15 வரை) உள்ள கீழ்கண்ட 46 பகுதி அலுவலகங்களில் நாளை (செவ்வாய்க் கிழமை) சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

1,2,3,4 வார்டுகளை சேர்ந்தவர்கள்: எண்.606, கே.எச்.ரோடு, எண்ணூர் என்ற இடத்தில் நடைபெறும் முகாமில் சான்றிதழ்களை பெறலாம்.

மேலும் சான்றிதழ்கள் வழங்கப்படும் இடங்களும், வார்டுகளும் வருமாறு::

5,6,7,8,9 வார்டுகளை சேர்ந்தவர்கள்: எண்.5/17, எண்ணூர் எக்ஸ்பிரஸ் ரோடு, மஸ்தான் கோவில் தெரு, கக்கன்ஜி நகர், திருவொற்றியூர்.

10,11,12,13,14 வார்டுகளை சேர்ந்தவர்கள்: 46, மேற்கு மாடவீதி, திருவொற்றியூர்.

15,16,17 வார்டுகளை சேர்ந்தவர்கள்: ஆண்டார் குப்பம் செங்குன்றம் ஹைரோடு, ஜங்சன் டி.பி.பி. சாலை, மணலி.

18,19,20,21,22 வார்டுகளை சேர்ந்தவர்கள்: 127, பட சாலை தெரு, மணலி.

23,24,32 வார்டுகளை சேர்ந்தவர்கள்: எண்.1, காந்தி முதல் தெரு, புழல்.

25,26,27,28 வார்டுகளை சேர்ந்தவர்கள்: எண்.1, பெருமாள் கோவில் மெயின் ரோடு, மாதவரம் பஸ் நிலையம் அருகில்.

29,30,31,33 வார்டுகளை சேர்ந்தவர்கள்: எண்.1, எம்.ஆர்.எச். ரோடு, மாதவரம்.

34,35,36,37,38 வார்டுகளை சேர்ந்தவர்கள்: சர்மா நகர், யு.பி.சி. மருத்துவமனை.

39,40,41,42,43 வார்டுகளை சேர்ந்தவர்கள்: எண்.600, திருவொற்றியூர் ஹைரோடு, கிருஷ்ணமூர்த்தி தெரு, தண்டையார்பேட்டை.

44,45,46,47,48 வார்டுகளை சேர்ந்தவர்கள்: 96, பார்த்த சாரதி தெரு, பழைய வண்ணாரப்பேட்டை.

49,50,51,52,53 (எல்.எப்.இசட்) வார்டுகளை சேர்ந்தவர்கள்: எண்.6/86, பெரம் பாலு தெரு, பழைய வண்ணாரப்பேட்டை.

54,55,56,57,60 வார்டுகளை சேர்ந்தவர்கள்: 28, சண்முகம் தெரு, ஏழுகிணறு தெரு, ஏழுகிணறு, ஜார்ஜ் டவுன்.

58,59,61,62,63 வார்டுகளை சேர்ந்தவர்கள்: எண்.2, ஆதி கேசவலு தெரு, சிந்தாதிரிபேட்டை.

64,65,69 வார்டுகளை சேர்ந்தவர்கள்: எண்.45/107, எஸ்.ஆர்.பி. கோவில் தெரு (தெற்கு), அகரம்.

66,67,68,70 வார்டுகளை சேர்ந்தவர்கள்: எண்.32, ஜவகர் நகர், 3: வது சர்கிள், 2: வது குறுக்குத் தெரு, பெரவள்ளுர்.

71,72,73,74,75,76,77,78 வார்டுகளை சேர்ந்தவர்கள்: எண்.50, அருணாச்சலம் தெரு, கொசப்பேட்டை, 5 லைட் அருகில்.

79,80,81,82,83 வார்டுகளை சேர்ந்தவர்கள்: வடக்கு பூங்கா தெரு, வெங்கடபுரம், அம்பத்தூர்.

84,85,86,87,88 வார்டுகளை சேர்ந்தவர்கள்: சர்ச் ரோடு, பாடி.

89,90,91,92,93 வார்டுகளை சேர்ந்தவர்கள்: சீதக்காதி சாலை, முகப்பேர் கிழக்கு, இ: சேவை மையம்.

94,95,96,97,104 வார்டுகளை சேர்ந்தவர்கள்: எண்.4, யுனைடெட் இந்தியா நகர், முதல் பிரதான சாலை, பாலவாயல் மார்க்கெட் அருகில், அயனாவரம்.

102, 103, 105, 106, 107 வார்டுகளை சேர்ந்தவர்கள்: எண்.124,கேபிளாக், அண்ணா நகர், 2: வது மெயின் ரோடு.

98, 99, 100, 101, 108 வார்டுகளை சேர்ந்தவர்கள்: எண்.4, கோவில் தெரு, கீழ்பாக்கம்.

109, 110, 111, 118, 119 வார்டுகளை சேர்ந்தவர்கள்: எண்.9, சி.ஐ.டி. காலனி, 6: வது குறுக்குத் தெரு, மைலாப்பூர்.

123, 124, 125, 126 வார்டுகளை சேர்ந்தவர்கள்: எண்.1, சித்திரக்குளம் தெற்கு தெரு, மைலாப்பூர்.

112, 113, 117, 122 வார்டு களை சேர்ந்தவர்கள்: ஆலயம்மன் கோவில் தெரு, தேனாம்பேட்டை.

114, 115, 116, 120, 121 வார்டுகளை சேர்ந்தவர்கள்: எண்.12, துளசிங்கம் பெருமாள் கோவில், 2: வது சந்து, திருவல்லிக்கேணி.

136, 137, 138, 139 வார்டுகளை சேர்ந்தவர்கள்: எண்.27, 61வது தெரு, 10: வது செக்டர், கே.கே.நகர்.

127, 128, 129, 130 வார்டுகளை சேர்ந்தவர்கள்: எண்.2 அம்மன் கோவில் தெரு, வடபழனி.

133, 140, 141, 142 வார்டுகளை சேர்ந்தவர்கள்: 12, மாசிலாமணி தெரு, தியாகராய நகர்.

131, 132, 134, 135 வார்டுகளை சேர்ந்தவர்கள்: க.எண்.1, கார்பரேஷன் காலனி ரோடு, கோடம்பாக்கம்.

143, 144, 146, 147 வார்டுகளை சேர்ந்தவர்கள்: எம்.எம்.டி.ஏ. 6: வது பிளாக், 33: வது தெரு, மதுரவாயல்.

145, 148, 149, 152 வார்டுகளை சேர்ந்தவர்கள் சி.வி. கோவில் தெரு, ஆழ்வார்திரு நகர்.

150, 151, 153, 154, 155 வார்டுகளை சேர்ந்தவர்கள் மவுண்ட் பூந்தமல்லி சாலை, போரூர்.

156, 157, 158, 159 வார்டுகளை சேர்ந்தவர்கள்: வார்டு அலுவலகம், கோட்டம்: 156, அரசு உயர்நிலைப் பள்ளி பாடசாலை, முகலிவாக்கம்.

160, 161, 162, 163 வார்டுகளை சேர்ந்தவர்கள்: சூப்பர் பஜார் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், புதுத் தெரு, ஆலந்தூர்.

164, 165, 166, 167 வார்டுகளை சேர்ந்தவர்கள்: வார்டு அலுவலகம், கோட்டம்: 165. ராம் நகர், 8: வது தெரு, நங்கநல்லூர்.

174, 179, 180 வார்டுகளை சேர்ந்தவர்கள்: எண்.2, 8: வது கிழக்குத் தெரு, காமராஜர் நகர், தெற்கு அவென்யு சாலை, திருவான்மியூர்.

176, 177, 178 வார்டுகளை சேர்ந்தவர்கள்: 65, வேளச்சேரி மெயின்ரோடு, வேளச்சேரி,

169, 170, 171, 173 வார்டுகளை சேர்ந்தவர்கள்: 115, டாக்டர் முத்துலெட்சுமி சாலை, அடையாறு.

168, 172, 175 வார்டுகளை சேர்ந்தவர்கள்: எண்.92, மகாலட்சுமி நகர், ஆதம்பாக்கம்.

181, 182, 183, 184 வார்டுகளை சேர்ந்தவர்கள்: எண்.2, ஸ்கூல் ரோடு, கந்தஞ்சாவடி, கோட்டம்: 182, வார்டு அலு வலகம், பெருங்குடி.

185, 186, 187, 188 வார்டுகளை சேர்ந்தவர்கள்: கோட்டம்: 188, வார்டு அலுவலகம் எண்.1, டாக்டர் அம்பேத்கர் சாலை, மடிப்பாக்கம்.

189, 190, 191 வார்டுகளை சேர்ந்தவர்கள்: கோட்டம்: 189, வார்டு அலுவலகம் எண்.1, துலுக்கானத்தம்மன் கோவில் தெரு, பள்ளிக்கரணை.

192, 194, 197, 199 வார்டுகளை சேர்ந்தவர்கள்: கோட்டம்: 194, வார்டு அலுவலகம், எண். 14, வி.ஓ.சி. தெரு, ஈஞ்சம்பாக்கம்.

193, 195, 196, 198, 200 வார்டுகளை சேர்ந்தவர்கள்: கோட்டம்: 196, வார்டு அலுவலகம் கண்ணகி நகர் 8: வது பிரதான சாலை, துரைப்பாக்கம்.

சிறப்பு முகாம்கள் நாளை தொடங்கி தினந்தோறும், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்குறிப்பிட்டுள்ள இடங்களில் நடைபெறும்.

Tags:    

Similar News