சென்னை கிண்டி தனியார் மதுபான பாரில் குத்தாட்டம் போடும் பெண்கள்
Private Bar - சென்னை கிண்டி தனியார் மதுபான பாரில் பெண்கள் குத்தாட்டம் போடுவதாகவும் இதனை போலீசார் கண்டு கொள்வதில்லை என்றும் கூறப்படுகிறது.;
Private Bar - சென்னை கிண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, வேளச்சேரி பிரதான சாலை, குருநானக் கல்லூரி அருகில் ஒரு தனியார் மது பான பார் செயல்பட்டு வருகிறது. வார இறுதி நாட்களில் அரசு அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் விடிய விடிய சட்டவிரோதமாக மதுபானம் விற்கப்படுகிறது. மது அருந்தும் ஆண்கள் மகிழ்வாக இருக்க பெண்களை வைத்து குத்தாட்டம் போட்டு ஆபாச நடனமும் அரங்கேற்றப்படுகிறது.
குத்தாட்டம் போடும் பெண்களுக்கு குடிமகன்கள் பணத்தை கொடுத்து அவர்களை தொட்டு தொட்டு நடனமாடுகின்றனர். கிண்டி காவல் நிலையத்தில் சூதாட்டம், சட்டவிரோதமாக பாரில் பெண்களின் குத்தாட்டம் என நடந்து வருவதை ஆய்வாளர் கண்டும் காணாமல் இருப்பது ஏன் என்ற கேள்வியை எழுப்புகிறது.
மேலும் இந்த குத்தாட்டம் சம்பவம் நடப்பது வீடியோவாக பதிவு செய்யாமல் இருக்க வாடிக்கையாளர்களுக்கு செல்போன் அனுமதி இல்லை என்ற விதியை பார் நிர்வாகம் கண்டிப்புடன் பின்பற்றுகிறது.
இந்த பார் அரசியல் பிரமுகர்களுக்கு சொந்தமானது என்பதால் கிண்டி போலீசாருக்கு சில கவனிப்பு செய்யப்படுவதாகவும் அதனால் தான் கண்டும் காணாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2