சென்னை சைதாப்பேட்டை வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட 2500 பேருக்கு உணவு!

சென்னை சைதாப்பேட்டை வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட 2500 பேருக்கு உணவு வழங்கஎன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழிவகுத்தார்.;

Update: 2021-05-28 06:11 GMT

சென்னை சைதாப்பேட்டை வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் 2480 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கும் திட்டத்தை இந்த தொகுதியின் எம்எல்ஏவும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறுகையில், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளின் பெயர், விவரம், முகவரி உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு உணவு வழங்க சமையல் கூடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அங்கு தயாராகும் உணவு வகைகளை 100 களப் பணியாளர்கள் வீடுதேடி சென்று விநியோகம் செய்வார்கள். தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு காலை இட்லி, பொங்கல், கிச்சடி, மதியம் சாப்பாடு, இரவு டிபன் வகைகள் என்று 3 வேளையும் இலவசமாகவழங்கப்படும் என்றார்.

Tags:    

Similar News