சென்னையில் மாநகராட்சி குப்பை வாகனம் திடீரென தீப்பிடித்து விபத்து
சென்னையில் மாநகராட்சி குப்பை வாகனம் திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.
சென்னை கிண்டி, ஸ்பிக் அருகில் சாலையில் சென்று கொண்டிருந்த மாநகராட்சி குப்பை ஏற்றிச் செல்லும் வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக ஓட்டுநர் இறங்கி தீயணைப்பான் கொண்டு தீயை அணைக்க முயன்றார். தீயை அணைப்பதற்குள் முழுவதுமாக எரிந்து சேதமாயின.
தகவலறிந்து கிண்டியில் இருந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை முழுவதும் கட்டுப்படுத்தினர்.
விசாரணையில் கே. கே. நகரை சேர்ந்த கண்ணன் என்பவர் மண்டலம் 10ல் சேகரமான குப்பையை பெருங்குடி குப்பை கிடங்கில் கொட்டுவதற்காக வாகனத்தை ஓட்டி வந்ததாகவும், வாகனத்தின் முன்பகுதியில் திடீரென சத்தம் வரவே நிறுத்திவிட்டு பார்த்த போது எரிய துவங்கியது. சிறிது நேரத்தில் வாகனம் முழுவதும் பரவிய தீயால் முற்றிலும் எரிந்து சேதமானது.
சம்பவம் தொடர்பாக கிண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.