வண்ணாரப்பேட்டையில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு
வண்ணாரப்பேட்டையில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
தமிழகத்தில் அக்டோபர் 21 முதல் 30 ஆம் தேதி வரை காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக வண்ணாரப்பேட்டை காவல் சரகம் சார்பில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் சிவபிரசாத் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உதவி ஆணையாளர்கள் உக்கிரபாண்டி, இருதயம், ஆய்வாளர்கள் ரவி, சங்கரநாராயணன் மற்றும் காவலர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் துவக்கமாக பணியின்போது இறந்த காவலர்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.