ஸ்டான்லி மருத்துவமனையில் 3 ஆவது நாளாக தொடரும் ஆர்ப்பாட்டம்
ஸ்டான்லி மருத்துவமனையில் முதுகலை பயிற்சி மருத்துவர்கள் 3வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.;
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவ முதுகலை படிப்பிற்கான முதலாமாண்டு கவுன்சிலிங்கை நடத்தக்கோரி 3 ஆவது நாளாக முதுகலை பயிற்சி மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் முதுகலை முதலாமாண்டு மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வை உடனடியாக நடத்த மத்திய அரசுக்கு தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும்,
தமிழக அரசு மாணவர்கள் சேர்க்கையில் 50 சதவிகித சேர்க்கைக்கான கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் எனவும், அம்மா கிளினிக் போன்றவற்றில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் மருத்துவர்களை அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்தினால் தங்களின் பணிச்சுமை குறையும் எனக்கூறி தொடர்ந்து 3 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.