சாலையோரம் வசிப்போர் ஆதார் எண் இல்லாதவர்களும் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்

சென்னையில் சாலையோரம் வசிப்போர், ஆதார் எண் இல்லாதவர்களும் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்;

Update: 2021-09-12 06:27 GMT

சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி

மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் சாலையோரம் வசிப்போர், வீடற்றோர், ஆதார் எண் இல்லாதவர்களும் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என கூறியுள்ளார்.

சென்னையில் தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடைபெறும் எனவும், தடுப்பூசி கையிருப்பு அதிகம் இருப்பதால் பொதுமக்கள் விரைவாக தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News