5 மெட்ரோ இரயில் நிலையங்களில் பெண்கள் இயக்கும் ரேபிடோ பைக்

5 மெட்ரோ இரயில் நிலையங்களில் பெண்கள் இயக்கும் ரேபிடோ பைக் இணைப்பு வாகன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Update: 2023-04-13 08:08 GMT

 ரேபிடோ பைக் இணைப்பு வாகன வசதியை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

சென்னை, நந்தனம் மெட்ரோ இரயில் நிலையத்தில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், ரேபிடோ நிறுவனத்துடன் இணைந்து, பெண்கள் மட்டுமே இயக்கும் ரேபிடோ பைக் இணைப்பு வாகன வசதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சேவையை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

பின்னர் சென்ளை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி தெரிவித்ததாவது:-

மெட்ரோ இரயில் பயணிகளின் வசதிக்காக குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் நம்பகமான இணைப்பு வாகன சேவை சேவை வழங்குவதில் நோக்கமாக கொண்டுள்ளது. பெண்களால் இயக்கப்படும் ரேபிடோ பைக் சேவை தொடங்கியுள்ளது. நிலையான போக்குவரத்து சேவையை மேம்படுத்துவதற்கும் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் இந்த முயற்ச்சியை மேற்கொண்டுள்ளது. இச்சேவையில் பெண்களால் இயக்கப்படும் 50 பைக்குகள் நந்தனம் மெட்ரோ இரயில் நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

பெண்களால் இயக்கப்படும் இந்த பைக் சேவை வசதி முதற்கட்டமாக, ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, எழும்பூர், சைதாப்பேட்டை மற்றும் அரசினர் தோட்டம் மெட்ரோ இரயில் நிலையங்களில் இயக்கப்படுகிறது. தேவை மற்றும் சேவையின் அடிப்படையில் பின்னர் அனைத்து மெட்ரோ இரயில் நிலையங்களிலும் விரிவுபடுத்த ஆலோசிக்கப்படும்.

இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தொடர்வண்டி மற்றும் இயக்கப்பிரிவு கூடுதல் பொது மேலாளர் எஸ். சதீஷ்பிரபு, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மற்றும் ரேபிடோ பைக் நிறுவனத்தின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News