சென்னை போக்குவரத்து போலீசாருக்கு ரெயின்கோட்: போலீஸ் கமிஷனர் வழங்கல்

சென்னையில் பாலாஜி சேவா அமைப்பினர் முன்னிலையில், போக்குவரத்து காவலர்களுக்கு 1,000 மழை அங்கிகள் வழங்கப்பட்டது.;

Update: 2021-11-02 17:52 GMT

போலீசாருக்கு ரெயின்கோட்டுகளை வழங்கும் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால். உடன் பாலாஜி சேவா அமைப்பினர்.

சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவலர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, பாலாஜி சேவா அமைப்பினர், மழைக் காலங்களில் போக்குவரத்து காவல் ஆளிநர்களின் பயன்பாட்டுக்காக 1,000 மழை அங்கிகள் (Rain Coats) வழங்க முன் வந்தனர்.

அதன்பேரில், இன்று (02.11.2021) மாலை, வேப்பேரி, சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு 1,000 மழை அங்கிகள் வழங்கும் அடையாளமாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால்,  பாலாஜி சேவா அமைப்பின் நிர்வாகிகள் முன்னிலையில், 40 போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு மழை அங்கிகள் (Rain Coats) வழங்கினார்.

உடன், பாலாஜி சேவா அமைப்பின் நிர்வாகிகள் ஓய்வு பெற்ற காவல்துறை இயக்குநர்  வைகுந்த்,  வினோத் சரோகி இருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) முனைவர் J.லோகநாதன், துணை ஆணையாளர் (போக்குவரத்து திட்டமிடல்) V.K.சுரேந்திரநாத், போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News