சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பொதுப் பேருந்து போக்குவரத்து அனுமதி
தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை 28ம் தேதி வரை நீட்டித்துள்ளது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல் பட்டு மாவட்டங்களில் பொதுப் பேருந்து போக்கு வரத்துக்கு அனுமதி அளித்துள்ளது.;
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 21 ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில் ஜூன் 28 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்குள்ளும், 4 மாவட்டங்களுக்கு இடையேயும் பொது பேருந்து போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமலும், 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதியளித்துள்ளது.
மேலும், இந்த 4 மாவட்டங்களில் வாடகை வாகனங்கள், டேக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவில்லாமல் செல்லலாம். மேலும், வாடகை டேக்ஸிகளில், ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படுவர்.
நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி மெட்ரோ ரயில் போக்குவரத்து, 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது..