சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்க ஓபிஎஸ், ஈபிஎஸ் தாக்கல் செய்த வழக்கு
அதிமுக பொதுச்செயலாளராக உரிமை கோரி சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்க ஓபிஎஸ், ஈபிஎஸ் தாக்கல் செய்த வழக்கு-தீர்ப்பு தள்ளிவைப்பு
அதிமுக பொதுச்செயலாளராக உரிமைக் கோரி சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்க ஓபிஎஸ், ஈபிஎஸ் தாக்கல் செய்த வழக்கு
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா உரிமை கோரியதை எதிர்த்து ஓபிஎஸ், ஈபிஎஸ் தொடர்ந்த வழக்குகள் மீது சென்னை உரிமையியல் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குவதாக இருந்தது.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் கூட்டப்பட்டு, சசிகலா மற்றும் டிடிவி தினகரனை கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் பதவிகளில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து 2017ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லாது என அறிவிக்கவும், 2016-ல் தன்னை பொதுச்செயலாளராக அறிவித்த தீர்மானம் ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸை கட்டுப்படுத்தும் என அறிவிக்க கோரி சசிகலா வழக்கு தொடர்ந்தார்.
மேலும், அதிமுகவில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் சட்ட விரோதம் என உத்தரவிடவும் அவர் கோரியிருந்தார். இதையடுத்து, சசிகலா வழக்கை நிராகரிக்குமாறு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது, பொதுச்செயலாளராக சசிகலா உரிமை கோர வாய்ப்பு இல்லை, கட்சியும், சின்னமும் தங்களிடம் இருப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளதாக கூறினர். இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், சென்னை உரிமையியல் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகுவதாக இருந்தது இந்நிலையில் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி இன்று விடுமுறையால் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.