சென்னையில் செப்டம்பர் 20-ஆம் தேதி அஞ்சலக குறைதீர் கூட்டம்

சென்னை மாநகர தெற்குப் பிரிவின் கட்டுப்பாட்டில் செயல்படும் அஞ்சலக சேவைகள் குறித்து கருத்து கூறலாம்.;

Update: 2021-09-15 09:32 GMT

சென்னையில் வரும் 20.09.2021 அன்று பிற்பகல் 3 மணியளவில் சென்னை மாநகர பிரிவின் தியாகராய நகர் வடக்கு அஞ்சல் அலுவலக வளாகத்தில் உள்ள, மூத்த அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அஞ்சல் குறைதீர்வு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தியாகராய நகர் வடக்கு அஞ்சலக வளாகம் (முதல் தளம்), வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை 600017 என்ற முகவரியில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது.

வடபழனி, விருகம்பாக்கம், சாலிகிராமம், கோடம்பாக்கம், மேற்கு மாம்பலம், அசோக்நகர், கே.கே நகர், புனித தோமையார் மலை, கிண்டி தொழிற்பேட்டை, சைதாப்பேட்டை, அடையாறு, திருவான்மியூர், பெசன்ட் நகர், புனித தோமையார் மலை தலைமையகம், மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், நங்கநல்லூர், சோழிங்கநல்லூர், ஒக்கியம் துரைப்பாக்கம், ஆழ்வார்திருநகர், ராஜா அண்ணாமலைபுரம், கோட்டூர்புரம், வேளச்சேரி உள்ளிட்ட சென்னை மாநகர தெற்குப் பிரிவின் கட்டுப்பாட்டில் இயங்கும் அஞ்சல் அலுவலகங்களில் அளிக்கப்படும் அஞ்சலக சேவைகள் (பணிவிடை/ பதிவுத் தபால்/ வங்கி சேமிப்பு/ சேமிப்பு சான்றிதழ்) குறித்த தங்களது கருத்துக்கள்/ பின்னூட்டங்களை, dochennaicitysouth.tn@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 17.09.2021 (வெள்ளிக்கிழமை) அன்றோ அல்லது அதற்கு முன்னரோ கிடைக்கும் வகையில் பொதுமக்கள் அனுப்பி வைக்க்கலாம். மேலும் இது குறித்த விபரங்களுக்கு 28341668, 28342554 என்ற தொலைபேசி எண்களை அணுகலாம்.

Tags:    

Similar News