தொடரும் விலையேற்றம்: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் இதோ!

சென்னையில் இன்று பெட்ரோல் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.;

Update: 2022-03-29 02:15 GMT

ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானதும் பெட்ரோல், டீசல் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதைப்போலவே, கடந்த மார்ச் 22 ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்தன.

இன்று, அவற்றின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. டீசல் விலை ஒரு லிட்டருக்கு 67 காசுகள் அதிகரித்து ரூ.96க்கு விற்பனையாகிறது. அதேபோல, பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ.105.94க்கு விற்பனையாகிறது.

கடந்த 8 நாட்களில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4.54, டீசல் விலை ரூ.4.57 அதிகரித்து இருப்பது வாகன ஓட்டிகளை கலக்கமடையச் செய்துள்ளது.

Tags:    

Similar News