சென்னை கொடுங்கையூரில் காய்கறி வியாபாரி படுகொலை- மனைவிக்கும் வெட்டு

சென்னை கொடுங்கையூரில் காய்கறி வியாபாரி படுகொலை செய்யப்பட்டார். அவரது மனைவிக்கும் வெட்டு விழுந்தது.

Update: 2022-02-28 08:43 GMT

வியாபாரி கொலைக்கு கண்டனம் தெரிவித்து கடைகள் அடைக்கப்பட்டன.

சென்னை கொடுங்கையூர் எருக்கஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் கோபி (வயது 51 ).இவர் கொடுங்கையூர் முத்தமிழ் நகர் தெற்கு அவன்யூ  பகுதியில் காய்கறி கடை நடத்தி வந்தார். இவரது  கடை அருகில் காய்கறி கடை நடத்தி வரும் அரவிந்த், ஆனந்த் ஆகியோருக்கும்  கோபிக்கும் இடையே ஏற்கனவே கடை போடுவதில் இடப்பிரச்சனை இருந்துவந்துள்ளது. இதனால் நேற்று மாலை அரவிந்த் மற்றும் ஆனந்த் ஆகிய இருவரும் சேர்ந்து தனது நண்பர்களுடன் கோபியை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். தடுக்க வந்த அவரது மனைவியையும் வெட்டினர்.

இதில் படுகாயம் அடைந்த அவர்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொலை சம்பவத்தை கண்டித்து கொடுங்கையூர் முத்தமிழ் நகர் பகுதியில் கடைகள் மற்றும் நடைபாதை கடைகள் என சுமார் 300 கடைகள் இன்று மூடப்பட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை அப்பகுதியில் ஒன்றுகூடிய வியாபாரிகள் கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கூறினர்

இதுகுறித்து  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வடசென்னை வடக்கு மாவட்ட செயல் தலைவர் வி. பி. வில்லியம்ஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில்

சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் குறிஞ்சி மலர் நிலையம் மற்றும் காய்கறி அங்காடி நடத்தி வரும் கோபி என்பவர் நேற்று இரவு மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். அதனை தடுக்க வந்த அவரது மனைவி லதாவும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் சிகிச்சை பெற்று நலமுடம்  வீடு திரும்ப வேண்டிக் கொள்வதாகவும் அதேவேளையில் படுகொலை செய்யப்பட்ட கோபியின் குடும்பத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.

மேலும் இதுபோன்று வணிகர்கள் மீது குண்டர்கள் தாக்குதல் நடத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும்.இந்த பாதக செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் எனவும் அவ்வாறு கைது நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டால் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தேசிய தலைவர் விக்கிரமராஜா  அறிவுறுத்தல் படி  மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News