வியாசர்பாடியில் இரும்பு வெட்டும் இயந்திரம் திருடியவர் கைது

வியாசர்பாடியில் இரும்பு வெட்டும் இயந்திரத்தை திருடியவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-02-25 06:17 GMT

கைதானவர். 

சென்னை வியாசர்பாடி பி வி காலனி 11வது தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர்,  கட்டுமான தொழில் செய்து வருகிறார். தனது வீட்டின் முன் பகுதியில் உள்ள காலியிடத்தில் இரும்பு  வெட்டும் கட்டிங் இயந்திரத்தை வைத்து இருந்தார்.  நேற்று காலை, அந்த இயந்திரத்தை காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து, பாலகிருஷ்ணனின் மகன் தினேஷ் குமார், எம்கேபி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த எம்கேபி நகர் போலீசார்ம் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வில்லிவாக்கம் ராஜமங்கலம் பகுதியைச் சேர்ந்த சரவணன், வயது 43 என்ற நபரை பிடித்து விசாரித்தனர். இயந்திரத்தை திருடியதை, அவர் ஒப்புக்கொண்டார். எம்கேபி நகர் போலீசார் இந்திரத்தை பறிமுதல் செய்தனர். சரவணனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News