காதலித்த பெண்ணின் போட்டோ காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

செம்பியம் பகுதியில், காதலித்து வந்த பெண்ணின் படங்களை காட்டி மிரட்டி, பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-11-24 03:19 GMT

சென்னை, பெரம்பூர் செம்பியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் வனஜா 26 (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரும் அவரது உறவினரான உதயகுமார் என்பவரும் காதலித்து வந்தனர். சில வருடங்களுக்கு முன்னர், இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. பின்னர் உதயகுமாரின் நடவடிக்கைள் சரியில்லாத காரணத்தினால் வனஜா மேற்படி திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

இந்நிலையில்,  உதயகுமார், வனஜாவிடம் காதலித்து வந்தபோது எடுத்த படங்களை காட்டி மிரட்டி தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து வனஜா, செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான குழுவினர் தீவிர விசாரணை செய்ததில், புகார்தாரர் வனஜாவிற்கு வேறோரு நபருடன் திருமணம் நடைபெறவிருப்பதை அறிந்து உதயகுமார், வனஜாவின் புகைப்படங்களை காட்டி, மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது. அதன்பேரில் பெரவள்ளூர் அனைத்து மகளிர் போலீசார் வியாசர்பாடி பகுதியை சேர்ந்த உதயகுமாரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட உதயகுமார் விசாரணைக்குப் பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News