தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு செம்பியம் சரக போலீசார் விழிப்புணர்வு

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு செம்பியம் சரக போலீசார் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-01-25 06:13 GMT

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கும் குழந்தைகளுக்கும் போக்சோ சட்டம் குறித்து போலீசார் மற்றும் தன்னார்வ அமைப்பினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 24ஆம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் போலீசார் மற்றும் தன்னார்வ அமைப்பினர் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று மாலை பெரம்பூர் முரசொலி மாறன் பூங்காவில் செம்பியம் சரக போலீசார மற்றும் தனியார் அறக்கட்டளை இணைந்து பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

அப்போது அறக்கட்டளையை சேர்ந்த குழந்தைகள் நாடகம் மூலம் குழந்தைகள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்கவேண்டும். செல்போன்களை எவ்வாறு பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து தத்ரூபமாக நடித்து விளக்கினார்.

மேலும் தற்போது ஆன்லைன் மூலம் குழந்தைகள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர் என்பது குறித்தும் பொது மக்களுக்கும் குழந்தைகளுக்கும் நாடகம் மூலம் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் செம்பியம் சரக உதவி கமிஷனர் செம்பேடு பாபு கலந்துகொண்டு பொதுமக்கள் மற்றும் குழந்தைகளிடம் போக்சோ சட்டம் குறித்து தெளிவாக எடுத்துரைத்தார்.

இந்த சட்டத்தில் உள்ள சிறப்பு அம்சங்கள் குறித்தும் எவ்வாறு போக்சோ சட்டம் செயல்படுத்தப்படுகிறது. நீதிமன்றத்தில் எவ்வாறு வழக்குகள் விசாரிக்கப்படு கின்றன என்பது குறித்து பொதுமக்களுக்கு தெளிவாக எடுத்துரைத்தார்.

குழந்தைகளின் பாதுகாப்பை பெற்றோர்கள் எவ்வாறு உறுதி செய்ய வேண்டும். தற்போது ஆன்லைன் வகுப்புகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதால் பெற்றோர்கள் பிள்ளைகள் செல் போன் பாஸ்வேர்ட் எண் மற்றும் எந்த வெப்சைடை குழந்தைகள் பயன்படுத்துகின்றனர் என்பது குறித்து பெற்றோர்கள் தெளிவாக தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றும், முகநூல் மற்றும் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிடுவதால் எதுபோன்ற பின்விளைவுகளை குழந்தைகள் சந்திக்கின்றனர் என்பது குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.

Tags:    

Similar News