பெரம்பூரில் உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட 2,000 கிலோ அரிசி பறிமுதல்
பெரம்பூரில் உரிய ஆவணமின்றி காெண்டு வரப்பட்ட 2000 கிலோ அரிசி மூட்டைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.;
பெரம்பூரில் உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட 2,000 கிலோ அரிசி பறிமுதல்
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் விதிமுறைகள் அமலில் இருந்து வருகின்றன. நேற்று இரவு 12 மணி அளவில் செம்பியம் காவல் நிலையத்துககு உட்பட்ட முரசொலி மாறன் மேம்பாலம் பகுதி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த மினி வேன் ஒன்றை மடக்கி சோதனை செய்தனர். அதில் அரிசி மூட்டைகள் இருந்தன வாகனத்தில் இருந்த ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த முத்து வயது 46 என்பவரிடம் விசாரித்தபோது அரிசி மூட்டைகளுக்கு உரிய ஆவணம் இல்லாததால் வாகனத்தில் இருந்த 2000 கிலோ அரிசி மூட்டைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூட்டைகள் செம்பியம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.